January 25, 2012

மொழி.

என்னடா பேர் இது...மொழி படத்தோட ரீமேக்கா இல்ல பார்ட்அப்படின்னு யாரும் பயப்பட வேண்டாம், ஒரு மொழி பேசுறவன் இன்னொரு மொழி பேசுற ஊர்ல படுற பாடு தான் நம்ம `மொழி`...விஜய் ஏன் ரீமேக் படத்துல நடிக்கிறாரு, ராமதாஸ் ஏன் அடிக்கடி கட்சி தாவுராருன்னு பெரிய பெரிய விஷயமெல்லாம் பேசாம ஏதோ நம்மளால முடிஞ்ச இந்த சின்ன விஷயத்த பேசுவோம்..
 
இந்த ஊருக்கு வந்த புதுசுல நம்ம ரூம் மேட்டோட டீ குடிக்க வெளில வந்தேன், அங்க 2 பொண்ணுங்க ஏற்கனவே நின்னுட்டு இருந்தாங்க..அவங்கள பார்த்த சந்தோஷத்துல நானும் கொஞ்சம் கமெண்ட் அடிச்சிட்டு இருந்தேன்.திடீர்னு இதையெல்லாம் கேட்டுட்டு இருந்த அவங்க ரெண்டு பேரும் என் காதுல விழற மாதிரி தமிழ்ல பேச ஆரம்பிச்சாங்க.ஆஹா அப்படின்னு லைட்டா ரெண்டு ஸ்டெப் பின்னாடி போகலாம்னு நினைச்சேன், சரி சமாளிப்போம்னு ` அப்பாட இந்த மாதிரி தேன் குரல்ல தமிழ கேட்டு எவ்ளோ நாளாச்சு இன்னும் ரெண்டு வார்த்த எக்ஸ்ட்ராவா பேசுங்க` அப்படின்னு சொன்னது அவங்களும் சிரிச்சிட்டு போய்ட்டாங்க, நானும் தப்பிச்சேன்.இத கேக்க கொஞ்சம் காமடியா  இருந்தாலும் உண்மையிலேயே என் நிலைமை அப்படி தான் இருந்துது, தமிழ  கேக்க முடியாம, பேச முடியாம....சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்..
 
தமிழ் பேசுரவன்னு  தெரிஞ்சாலே போதும், அவன் கிட்ட கேக்கனும்னே ரெடிமேடா கொஞ்சம் கேள்விகள வெச்சுருப்பாங்க, அதெல்லாம் என்னன்னா தமிழர்கள் ஏன் கருப்பா இருக்காங்க (உதாரணம் ரஜினி ), கருணாநிதிக்கு எத்தன பொண்டாட்டி ஏன் அவ்ளோ சொத்து (என்னமோ இவனுங்க ஊர்ல இருக்குற அரசியல்வாதிங்க எல்லாரும் ஒழுக்க சீலர்கள் மாதிரியும், ரோட்ல ஒரு ரூபா பாத்தாலும் உடனே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்குற மாதிரியும்),ஏன் உங்களுக்கு ஹிந்தி தெரியல ( அது ஒரு குத்தமாய்யா), ஏன் உங்க ஊர்ல இப்படி வெய்யில் கொளுத்துது ( அதுக்கு நாங்க என்னையா பண்றது), கல்யாணத்துல ஏன் அவ்ளோ நகைங்கபோடறீங்க ( என்னமோ இவனுங்க யாரும் நகையே போடாத மாதிரி), எங்க போனாலும் ஏன் தமிழர்கள் பிரச்சன ( தண்ணீர், முல்லை பெரியார்,இலங்கை ,மலேசியா இப்படி) பண்றீங்க,தமிழ் தமிழ் ஏன்அடிச்சிக்கிறீங்க, ஏன் விஜய் ரீமேக் படத்துல மட்டும் நடிக்கிறாரு..அப்படின்னு நிறைய கேள்விகள் இருக்கு..தமிழ் சிங்கம் மாதிரி சிங்கிளா தான் வரும், தண்டவாளத்துல தலைய கொடுக்குற அளவுக்கு தைரியம் உள்ளவர் தான் கருணாநிதி பொது வாழ்க்கைய மட்டும் பாருங்க சொந்த வாழ்கை நமக்கு தேவ இல்ல, இப்படின்னு ஓரளவு என்னால முடிஞ்ச அளவு இதுல எல்லாத்துக்கும் பதில் சொல்லி இருக்கேன்.( விஜய் ரீமேக் விஷயத்த தவிர - என் தோல்விய நான் ஒத்துக்குறேன்).. 

புதுசா இன்னொரு ஊருக்கு கிளம்பி வரவன் அத்தன பேரும் சமாளிக்க வேண்டிய இன்னொரு விஷயம்..அத்தியாவசிய பொருட்கள வாங்குறதுதான்..கடைக்கு போய் நல்லெண்ணையும், சீயகாயையும் வாங்க  பட்ட பாடு எனக்கு தான் தெரியும், அடுத்து ஆட்டோகாரன்,அவன் கிட்ட பேசி நாம போற எடத்த சொல்லி புரிய வெக்குரதுகுள்ள, அவன் நாக்கு தெள்ளிதே அப்படிம்பான் எனக்கு நாக்கு தள்ளிடும்..அப்படியும் கொண்டு பொய் சேக்குறான...இல்ல... ஒன்னு தப்பான எடத்துக்கு போவான், இல்ல லாரிக்கடில பார்க் பண்ணிடுவான்..இவனுங்களால கைல ஒரு கோடு வாங்கி கைல பூரான் விட்டுகிட்டது தான் மிச்சம். முக்கியாமான இன்னொரு விஷயம் மிச்ச எல்லாரும் ரொம்ப தத்துவார்த்தமா, கவிதை நயமா படம் எடுக்குற மாதிரியும், நாம மட்டும் தான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல கொலையும், அப்புறம் குத்துபாட்டும் வெக்குற பழக்கத்த கண்டுபிடிச்சவங்க மாதிரியும் நடந்துவாங்க, அதுலயும் ஹீரோ அல்லது ஹீரோயனோ  யாரவது க்ளைமாக்ஸ்ல செத்து போயட்டாலோ, இல்ல லவ்வர்ஸ் சேராம பிரிஞ்சிட்டாலோ..இந்த தமிழ் பசங்களே இப்படி தாம்பா...அப்படின்னு பயங்கரமா பீல் ஆகி வெக்ஸ்ஆகிடுவாங்க..எவ்ளோ நல்ல படமா இருந்தாலும் அது ஊத்தி மூடிக்கும்  ( சிறந்த உதாரணம்: நாடோடிகள்)

வெள்ளையாய் இருக்குற நடிகர் கமல் பத்தியோ (ரஜினியோட திறமைய, அடக்கத்த, ஒழுகத்த பாருங்கய்யா,அவர் எப்படி இருந்தா
என்னையா)  இல்ல திறமையான மணிரத்னம், பாலா, ஷங்கர் பத்தியோ, இல்ல விஞ்ஞானி அப்துல் கலாம், நிலாவுக்கு ராக்கெட் விட்ட மயில்சாமி அண்ணாதுரை பத்தியோ, ரஹ்மான் பத்தியோ  இவங்க யாரும் புகழ்ந்து பேசமாட்டங்க அவங்க தமிழர்னு சொல்லமாட்டங்க..அவங்கெல்லாம் பொது சொத்து...அவ்ளோ ஏன் நம்ம முடிச்சவுக்கி ப்ளாக் பாட்னர் இருக்காரே (என்ன இருக்காரே...முன்னாடி இருந்தாரே அதான் சரி) ஸ்ரீராம்..அவர் ஒரு தமிழர் தான் என்ன ஒரு தரம் அவர் கூட பாத்துட்டு அவர் நார்த் இந்தியானா, மலையாளியா, அப்படீன்னு கேக்குறாங்களே தவிர,அவன் தமிழ் தான்யா சொன்னா என்ன அடிக்கவரானுங்க...( அவனுங்கள சொல்லி குத்தமில்ல நம்மாளு கலர் அப்படி, வெள்ளைக்காரனுக்கு சவால் விடலாம்,).
 
இத்தனையும் தாண்டி எனக்கு நடந்த நல்ல விஷயங்கள் தமிழ தவிர 2 மொழிய கொஞ்சம் பேசவும், நிறைய புரிஞ்சுக்கவும் முடியுது, இந்த மாதிரி நிலமைய தனியா சமாளிக்கவும் கத்து தருது, சென்னைல பொறந்து வளர்ந்ததால தமிழ்நாட்ல இருக்குற வேற வட்டார வழக்கு மொழி அப்புறம் மக்கள் இவங்களோட `வாங்க பழகலாம்` அப்படின்னு சொல்ற வாய்ப்பு இல்லாம இருந்துது...ஆனா இங்க வந்ததுக்கபுறம் தான்..இந்த வழக்கு மொழியெல்லாம் என்னோட காதுல விழுந்துது..நம்ம பாட்னர் மூலமா நமக்கு நண்பரான மண் மனம் மாறா மதுரையின் மைந்தன் தலைவர் செல்வாவும், அவரால எனக்கு கெடைச்ச நண்பர்களும்..இந்த `ஓடிப்போனவன்எபிசோட்ல சொல்லி இருந்தேனே ஒரு தீய சக்தி க்ரூப்பு அவனுங்க மொத்த பேரும்...கோயம்புத்தூர், தஞ்சாவூர், இப்படின்னு பல ஊரு மொழியும் வழக்கத்தையும் சேர்த்து எடுத்துட்டு வந்தவனுங்க... சேர்ந்தவனுங்க.
 
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எங்களுக்கெல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்தாங்க, அதையே எல்லா ஊர்லயும் அவங்கவங்க ஊர் பேர
 போட்டு ரீமிக்ஸ் பண்ணி சொல்லி கொடுத்து வளர்துருப்பங்கன்னு நினைச்சு தான் இந்த ஊருக்கு வந்தேன்..அப்படி இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுது..அவங்களுக்குன்னு இல்ல நமக்கு சேர்த்து சில விஷயம் இன்னொரு மொழி பேசறவன் நம்ம ஊருக்கு வரும் போது, அவன  கொல்டி அப்படின்னு சொல்றது, ஜாதி பேரையோ மத பேரையோ சொல்றது, அத பன்னவனுங்க தானே நீங்க அப்படின்னு சொல்றதோ கொஞ்சம் குறைசுகலாம்னு தோணுது. நம்மாளுங்க நாம பேசுற தமிழ் மொழியவே அவ்ளோ சீக்கிரம் மதிக்க மாட்டங்க...எங்க இருந்து இன்னொரு மொழிய மதிக்கிறது சொல்லுங்க..நிறவெறி வெளி நாட்ல தான் இருக்கு அதனால தான் லின்கன், லூதர் கிங் அப்படின்னு தலைவர்கள் வந்தாங்கன்னு நாமபடிக்கிறதோட நிப்பாடிக்கிறோம்...நம்ம ஆளுங்களுக்கும் அத பத்தி ஒரு பெரிய கிளாஸ் எடுத்தா சரியா இருக்கும்..

நான் சார்ந்த ஜாதியையோ, இல்ல மதத்தையோ காப்பத்தனும், அடுத்த வரவனும் அத கடை பிடிக்கணும் அப்படின்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல, ஆனா நான் பேசுற மொழி எனக்கு அப்புறமும் தொடரனும், அ - அம்மா, ஆ - ஆடு, அப்படின்னு படிக்க தெரிஞ்சா கூட போதும்.ஒன்னும் பெரிய திருக்குறளோ, கள்ளிக்காட்டு இதிகாசமோ, இல்ல அவதார புருஷனோ எழுதருதுக்கு நாம திருவள்ளுவரோ , வாலி, வைரமுத்துவா இருக்க வேண்டிய  அவசியம் இல்ல..சொன்னா சின்ன புள்ள தனமாவோ, இல்ல சில்ற தனமாவோ கூட இருக்கலாம்..இங்க கெடைக்குற காதலையும் மொழிக்காக ஏத்துக்காத `நல்லவங்களும்` இருக்காங்க...(இல்ல ஒரு தடவ செருப்படி பட்டதே போதும்னு கூட அந்த `நல்ல உள்ளம்` நினைச்சு இருக்கலாம்)
 
மேல எழுதி இருக்கிறது அத்தனையும் ஓரளவு உண்மைன்னு பட்டவங்க இத Facebook இல்ல எதாவது ஒரு இடத்துல ஷேர் பண்ணிவிடுங்க...நம்மாளுங்க முதல்ல இத படிக்கட்டும், வேற மொழி பேசறவனுக்கு நாம இதையே ரீமேக் பண்ணி ஆங்கிலத்துல ரிலீஸ் பண்ணுவோம்...

No comments:

Post a Comment