November 8, 2011

திருமணம்.

வணக்கம்..

திருமணம். சொல்றதுக்கு ரொம்ப சுலபமான அஞ்செழுத்து வார்த்த தான்..ஆனாஒருபேர் சேர்ந்து வாழ, அதுக்கு பின்னாடி எத்தன பேரோட பிரார்த்தனை, உழைப்பு, பயம், இருக்கு அப்படின்றத போன செப்டம்பர் மாசம் தான் நான் கண்கூட பார்த்தேன்...இது வரைக்கும் கல்யாணம்னு எங்கயாவது போனா, போனோமா, சாப்டோமா, ஏதோ கொஞ்சம் வேலை ஏதோ செஞ்சோமா, சைட்அடிச்சோமா அப்படின்னு வந்து போறதுன்னு இருந்த எனக்கு...கல்யாணம்அப்படின்ற விஷயம் எப்படி டென்ஷன் ஏற்படுத்தும் எவ்ளோ வேல வாங்கும், எங்க எல்லாம் பொறுமையா இருக்கணும்..இப்படி இன்னும் சொல்லிட்டேபோக நெறைய கத்து கொடுத்தது..
 
கல்யாணம்னா என்ன...முன்னாள் சாயந்தரம் வரவேற்பு அடுத்த நாள் காலைல முஹுர்த்தம் அப்படின்னு நெனைக்கிற நெறைய பேர்ல நானும்ஒருத்தன்..... 

ஆனா அந்த 24 மணி நேரத்துக்காக கிட்ட தட்ட 6 மாசம் சோறு தண்ணி சரியா சாப்பிடாமநைட்ல சரியா தூங்காம, என்ன நடக்குமோன்னு ஏதோ மெகா சீரியல் மாமியார் மருமக சண்டைய பாக்குற சீரியசோட திரிஞ்சாரு ஒரு மனுஷன், மண்டபம்,சமையல், பூ, பால் மொதற்கொண்டு பல விஷயத்துக்காக...ஏற்கனவே கொஞ்சம் டென்ஷன் படர ஆள் வேற...இதுல இந்த டென்ஷன் வேற..
 
இன்னொருத்தர் ஏற்கனவே ஏகப்பட்ட பக்தியோட திரிஞ்சவங்க...அவங்கஇன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி பக்திய பத்தி பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்ட்டாங்க...வழக்கமாவே வாரத்துல 8 நாள் விரதம்  இருப்பாங்க...இன்னும் இந்த விஷயத்துக்காக ஒன்பதாவதா விரதம் இருக்க ஒரு நாள் தேடினாங்க...
 
படிக்கும் பொது ஏகப்பட்ட பேப்பர் அரியர் வெச்சப்போ, அதுக்கு அடிவாங்கினப்போ, உருப்படியான வேல இல்லாதப்போ, பல விஷயத்துல படுதோல்வி அடைஞ்சப்போ இப்படி எந்த ஒரு விஷயத்துக்கும் ரொம்ப அலட்டிக்காத ஒரு  ஜென்மம்..HDFC பாங்க்ல கடன் கேட்டு அவனுங்க பின்னாடி அலைஞ்சப்போ ஆனாரு பாருங்க டென்ஷன்..அதுவும் இந்த கல்யாணத்துக்குதான்...இவனுங்க கிட்ட அந்த ரெண்டு மாசம் காச வாங்க அவன் பட்டபாடு....அவனுக்கு மட்டும் தான் தெரியும்...
 
பொதுவா ஒரு இருவது, இருவத்தி மூணு வயசு வரைக்கும் ஒரு பொண்ணு ஒரு சூழ்நிலைல வளர்ந்து...திடிர்னு வேற விதமா, வேற விருப்புவெறுப்புகளோட வளர்ந்த ஒரு ஆணோட, ஒரு குடும்பத்தோட...ஒரு புதுசூழல்ல தன்ன டோட்டலா மாத்திக்கிட்டு இருக்க போறது அப்படின்ற ஒரு விஷயத்தோட சீரியஸ்னஸ் என்னனு இது வரைக்கும் எனக்கு சினிமால வசனமா பார்த்து தான் பழக்கம்....அது நேரடி அனுபவமா எவ்ளோ கஷ்டமான ( சந்தோஷமான கஷ்டம், ஏன்னா நம்ம ரூட்டு க்ளியர் ஆகுதுல்ல..) விஷயம்அப்படின்றது தெரிஞ்சுது...
 
சும்மா தேங்கா போட்டு கல்யாணத்துக்கு கொடுக்குற தாம்பூல பைல எவ்ளோஉழைப்பு இருக்கு..பை போட்ற துணிய வாங்க ஒரு கடை...அத நாலு பக்கம்தைக்குரதுக்கு நாலு பேர், சாமி படம், கல்யாணம் பண்ண போறவங்க பேர் போடுற அச்சுக்கு ஒரு நாலு பேர், பார்சல் பண்ணி மூட்ட கட்டோ ஒருத்தர், ....பால் எத்தன லிட்டர், சக்கர எத்தன கிலோ, அரிசி எத்தன மூட்ட...இப்படி எந்தஒரு சின்னதும், பெருசுமா நெறைய விஷயத்த பாக்க, கத்துக்க,, அதுக்கு தேவைபடர உழைப்பையும் பக்கத்துல இருந்து பாக்குற சந்தர்ப்பம் கெடைச்சது...(நிம்மதியா சைட் கூட அடிக்க முடில....)
 
ஏதோ என் அறிவுக்கு (அதெல்லாம் வேற இருக்கா எனக்கு) எட்டின, கல்யாணத்த பத்தின விஷயங்கள..நான் பார்த்து எனக்கு புரிஞ்ச விஷயத்த மட்டும் இங்க போட்ருக்கேன்...அதனால இதெல்லாம் ஒரு மேட்டர்
அப்படின்னு எழுதி எங்க நேரத்தையும் கெடுக்குற ராஸ்கல்...அப்படின்னு சொல்லவேண்டாம்னு....பணிவன்புடன் கேட்டுக்குறேன்... 
 
இப்படி பக்கத்துல இருந்து பாத்தேன், பக்கத்துல இருந்துசெஞ்சேன்....அப்படின்னு சொல்லிட்டே இருக்கானே.....திருட்டுத்தனமா இவன் கல்யாணம் பண்ணிட்டு யாருக்கோ கல்யாணம் ஆனா மாதிரி கத சொல்லிட்டு இருக்கானே அப்படின்னு இந்த நல்லவன (ஆஹா...) நீங்க சந்தேகப்படகூடாது...யாருக்கு கல்யாணம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி..மக்கள் கிட்ட நான் மன்னிப்புகேட்டுக்குறேன்....ரொம்ப தெரிஞ்சவங்க, ரொம்ப நாள் பழகினவங்க, நண்பர்கள் இப்படி ரொம்ப பேர டென்ஷன்ல கூப்பிட மறந்துருக்கலாம், செரியா கூப்பிடலஅப்படின்னு நீங்க நெனைக்கலாம், இத படிக்கிறவங்க யார இருந்தாலும் அதா எல்லாம் மறந்து ...மணமக்கள் நல்லா இருக்கணும்னு நீங்க மனமாரவாழ்த்தனும்....அது மட்டும் போதும்....(நேர்ல பாக்கும் போது மொய் பணத்த மறக்காம கொடுத்துருங்க...லேட்டா தரீங்கன்னு கோப பட மாட்டேன்.)
 
சோறு தண்ணி இல்லாம டென்ஷனா அலைஞ்சது எங்கப்பா, விரதத்துக்கு நாள் தேடிட்டு இருந்தது என்னோட மம்மி..மூணாவது காரெக்டர் அதாவது கடன் கேட்டு அலைந்தவர்....நான் தான்....நடந்த அந்த திருமண என் தங்கயோடது...(தமக்கை அப்படின்னு அழகு தமிழ்ல அன்போட சொல்லலாம்,தங்கச்சி பத்தி தனி பதிவு ரெட்யாயிட்டு இருக்கு..)....

பின் குறிப்பு: இதில் இருக்கும் புகைப்படம் திருமணத்தன்று எடுக்க பட்டது, நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யபட்டதோ, அல்லது வேறெங்கும் சுடபட்டதோ அல்ல...