February 7, 2012

ஓடிப்போனவன் - 2

திருப்பியுமா....இப்போ யாரு ஓடி போனா அத வேற இவன் எழுத வந்துட்டானே..அப்படின்னு யாரும் பயப்பட வேண்டாம்..முதல் ஓடிப்போனவன்ல  வந்த ஹீரோ ஓடினவரு ஓடினவரு தான்....திரும்பி வரவே இல்ல...இந்த ஓடிப்போனவன்ல வர கதா பாத்திரங்கள் அத்தன பெரும் ஓடின அன்னைக்கே  திரும்பி வந்தாங்க ஏன் ஓடினாங்க எதுக்கு ஓடினாங்க அப்படின்னு பாப்போம்.......இந்த சினிமா காரங்க சொல்வாங்கல்ல இது உங்க வீட்டு பக்கத்துல நடந்த கதை..இந்த மாதிரி ஆளுங்கள நீங்க பாத்து இருப்பீங்க அப்படினெல்லாம்.அது மாதிரி...முதல் ஓடிபோனவனுக்கும் ரெண்டாவது ஓடிப்போனவனுக்கு நெறைய வித்யாசம் இருக்கு..( ரொம்ப இழுக்குறானே...விஷயத்துக்கு வாடா....)......வருவோம்...

இந்த கதைல மொத்தம் மூணு கதாபாத்திரம் முதல்ல வரவரு பேரு ஸ்ரீ ஹரி - தெலுகு பேசுறவரு..ரெண்டாவது கேரக்டர் பேரு ராஜேஷ் - மலையாளி, மூணாவது ஒரு தமிழர் (நல்ல கூட்டணி..)இப்போதைக்கு அவர் பேரு வேண்டாம்...(தமிழர்னே வெச்சுப்போம்)..இந்த கதை நடந்த காலம்..1993 , ஜனவரி 11 , அப்போ இந்த மூணு பச்சை குழந்தைகளும் ஆறாப்பு (அதாவது ஆறாம் வகுப்பு) படிச்சிட்டு இருந்துதுங்க..இந்த மூணு குழந்தைங்களும் ஒரே வகுப்புல தான் படிச்சிட்டு இருந்துதுங்க..ஏற்கனவே ஸ்கூல் விட்டு வர வழில பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு போனது, புஸ்தக பைய ரோட்ல வெச்சுட்டு கிரிக்கெட் விளையாடினது அப்படின்னு இந்த குழந்தைங்க மேல பல கேஸ் இருந்துது...அதனால பல சமயங்கள்ல பப்ளிக்ல (குறிப்பா அந்த தமிழர் மட்டும்) செம அடி வாங்கி இருக்காங்க..இதையெல்லாம் கருத்தில் கொண்டு..எப்போ பாத்தாலும் அடிக்கிற அம்மா அப்பாவுக்கு பாடம் கற்பிக்க வீட்ட விட்டு ஒடனும்னு இந்த மூவர் கூட்டணி  செயற் குழுவக்கூட்டி முடிவு பண்ணினாக ..

ஒடனும்னு முடிவு பண்ணியாச்சு...ஆனா எங்க ஒடனும்னு தெரில..ஆனா மனசுக்குள்ள  ஓடி போகனும்ன்ற ஒரு வெறி, ஒரு லட்சியம் தீயா எறிஞ்சிட்டு இருந்துது..(தூ....)..அந்த நாளும் வந்துது....எல்லாரும் அவங்க அவங்க அப்பா பாக்கெட்ல கை வெச்சு கெடைக்குரத அள்ளிட்டு வரணும்னு முடிவு பண்ணியாச்சு...``ஓடி பொய் பெத்தவங்களுக்கு ஒரு நல்ல பாடம் கத்து கொடுக்கணும் டா...இந்த ஹிந்தி படத்துல வர மாதிரி நாம ஒரே பாட்டுல பணக்காரங்களா ஆகி இந்த ஊருக்கு ரிட்டன் ஆகி...எல்லார் மூஞ்சிலயும் கரிய பூசனும்டா``..அப்படின்னு அந்த மூணு குழந்தைகளும் சபதம் போட்டு வீறு கொண்டு எழுந்து வெற்றி நடை போட்டு புறபட்டாங்க...

வழக்கம் போல அன்னைக்கு காலைல எழுந்து ஸ்கூல் போற மாதிரி கெளம்பி... பள்ளிக்கூடம் போகாம இந்த மூணு பேரும் சேர்ந்து தங்களோட லட்சியத்தின் முதற்படியா மெரீனா பீச் போனாங்க..இதுக்கப்புறம் நம்ம வாழ்க்கைல விளையாட்டுக்கு இடம் இருக்காது அப்படின்னு சொல்லி பீச் தண்ணில நல்லா விளையாடிட்டு  வந்ததுக்கப்புறம்.. கொண்டு வந்த லஞ்ச் பாக்ச நல்லா முக்கிட்டு...எங்க போறதுன்னு தெரியாம ஒரு குத்து மதிப்பா மெரினா பீச்ல இருந்து நடந்து பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தானுங்க..(அப்போ வெளியூர் போற பஸ் எல்லாம் அங்க இருந்து தான் கெளம்பும்..)அவங்க லட்சியத்துக்கு தோதா எந்த ஊரு இருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே..மகாபலிபுரம் போற பஸ் அவங்க கண்ல தென் பட்டுது..டக்குனு அந்த பஸ்ல ஏறி டகால்னு டிக்கெட் எடுத்தானுங்க மகாபலிபுரத்துக்கு..அப்படி இப்படின்னு சாயந்தரம் ஆறு மணிக்கு ஸ்பாட்டுக்கு போய் சேர்ந்தானுங்க.....போய் இறங்கினதும்..நம்ம தமிழருக்கு பசி வயித்த கிள்ளிச்சு, ஆனா ராஜேஷுக்கு அழுகை வந்துருச்சு..என்னடான்னு விசாரிச்சா..அப்போவே அம்மா அப்பாவ பாக்கனும்னு அழுது அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்..என்ன டா கன்றாவி இது அப்படின்னு திகைச்சு போய், திக்கு தெரியாம நின்னாங்க  ஸ்ரீ ஹரியும், தமிழரும்..கொஞ்ச நேரத்துல தெலுங்கரும் அவர் மொழில அழ ஆரம்பிச்சுட்டாரு...அப்படியே அழுத மாதிரியே முகத்த வெச்சுகிட்டு தெலுங்கும், மலையாளமும் தமிழ பாக்க...(தமிழ் மட்டும் என்ன பண்ணும், அதுவம் தானே பயத்துல இருக்கு...பாவம்)..

சரி எதாவது பண்ணுவோம்னு `தமிழ்` பக்கத்துல இருக்குற ஒரு `நல்ல` ஹோட்டலுக்கு போய் (வயிறு முட்ட தின்னுட்டு காசு இல்லன்னு சொல்லலாம்னு நினைச்சு தான் அவர் உள்ள போனாரு)..` அய்யா சாமி நாங்க மெட்ராஸ் பசங்க..கண்ண கட்டி எங்கள கடத்திட்டு வந்துட்டாங்க..இது எந்த ஊருன்னு எங்களுக்கு தெரில எங்களுக்கு உதவி பண்ணுங்கய்யா உங்களுக்கு புண்ணியமா போகும் அப்படின்னு` முகத்த பாவமா வெச்சுகிட்டு பக்கத்துல இருந்த ரெண்டு காலேஜ் பசங்க கிட்ட நம்ம தமிழரோட நாக்கு நடனமாடிச்சு..இந்த கதைய கேட்ட அவனுங்க ரொம்ப சீரியஸ் ஆயிட்டானுங்க..இவ்ளோ சீரியஸ் ஆவானுங்கன்னு எதிர் பாக்காத மூணு பேரும்..எப்படியும் இத வெச்சு வீட்டுக்கு போய்டனும்னு திருப்பியும் சபதம் போட்டானுங்க...ஸ்ரீ ஹரி கொஞ்சம் வசதியான குடும்பத்துல பொறந்தவன்..அப்போவே அவங்க வீட்ல லேன்ட் லைன் போன் இருந்துதுன்னா பாருங்க..இந்த காலேஜ் பசங்க உடனடியா ஸ்ரீ ஹரி வீட்டுக்கு போன் பண்ண, உடனடியா ஸ்ரீ ஹரியோட காலேஜ் படிக்கிற அண்ணன் கைனடிக் ஹோண்டால கிளம்பி வர நைட் பத்தாயிருச்சு..அவங்க அண்ணன் இங்க வந்ததுக்கப்புறம் அந்த ஹோடேல்லையே நல்லா வயித்த நெறபிட்டு, வண்டில போக முடியாது பஸ்ல தான் போகணும் சொல்லி  கெளம்பி போனாங்க ..அஞ்சு பேரும்..ஓடிபோனவனுங்க மூணு, அண்ணனுங்க ரெண்டு..உண்ட மயக்கம் தமிழருக்கு எப்பவும் உண்டு என்பதால் நமது தமிழர் பேருந்தில் ஆழ்ந்த நித்திரையில் இறங்கினார், மற்ற இருவரும் பயம் கலந்த பயணத்தை மேற்கொண்டனர்..

நைட் 12 .30 மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு வான்தாங்க அங்க இந்த ரெண்டு குழந்தைகளோட, அதாவது ஸ்ரீ ஹரி & ராஜேஷ் அவங்க குடும்பமே ஏதோ பிக்னிக் போற மாதிரி கெளம்பி ஸ்கூலுக்கு வந்துட்டாங்க..ஸ்கூலோட வைஸ் பிரின்சிபால் கூட இருந்தாரு..நம்ம தமிழர் என்ன ஆனாரு....அவரு அவரோட பெத்தவங்கள தேடினாரு...ஆனா இருந்தது அவங்க அப்பா மட்டும் தான்...ஸ்கூல சேர்ந்தவங்க, ஸ்ரீ ஹரி & ராஜேஷ் குடும்பம் அப்படின்னு எல்லாரும் எங்கள பார்த்த சந்தோஷத்துல அழுதாங்க...ஆனா ஒரே ஒரு ஜீவன் மட்டும் என்ன நடந்துருக்கும்னு ஒரு குத்து மதிப்பா கண்டுபிடிசிருச்சு..அந்த ஜீவன்..தமிழரோட அப்பா...அப்படியே தமிழோட காத திருகி..சட்ட காலர புடிச்சு..தர தரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போய் செம.....அடி.....எப்படி 1 மணிக்கு ஆரம்பிச்சது 3 மணி வரைக்கும் மூச்சு திணற திணற விசாரணை நடக்குது..இந்த விஷயத்த கேள்வி பட்ட தெலுங்கும், மலையாளமும் தமிழ காப்பாத்த தன்னோட குடும்பத்தோட வந்துச்சு.அது  வரைக்கும் ஆள் கடத்தல் கதைய கரெக்டா காப்பதிட்டு வந்த அவனுங்களும், அத நம்பின அவங்க குடும்பமும் தமிழுக்கு நடந்த அந்த அர்த்த ராத்திரி பூஜைய பார்த்து மெரண்டு போனாங்க.தமிழுக்கு விழுந்த தர்மடிய பார்த்து..தெலுங்கும், மலையாளமும் ஆட்டோமாடிக்கா உண்மைய கக்கினானுங்க...அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன நடந்துருக்கும்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்ல... அடுத்த நாள் பள்ளிகூடத்துல மீண்டும் ஒரு விசாரணை..மூணு மொழியையும் ஒன்னு சேர விடாம பிரிச்சு வெக்கணும்னு நாட்டாம அதாவது வைஸ் பிரின்சிபால் தீர்ப்பு சொன்னாரு...வகுப்புக்குள்ள இந்த குழந்தைகள பிரிச்சாலும்.. மனதளவுலையும், வகுப்புக்கு வெளியையும் இவங்க துள்ளி குதிச்சு விளையாடி காலத்த  கழிச்சாங்க...அடுத்த 2 மாசத்துக்கு..

இப்படி சின்ன வயசுல ஒரு பெரும் லட்சியத்தோட கெளம்பின அந்த தமிழ் பையன் யாரு, அந்த லட்சியத்த நிறைவேத்த விடாம செஞ்ச அவங்கப்பா யாரு..இந்த நேரத்துக்கு ஓரளவு தெரிஞ்சுருக்கும்னாலும்..அதை சொல்ல வேண்டியது என் கடமை...அந்த லட்சிய தமிழ் சிறுவன்........நான் தான்...அவர் செஞ்ச வீர செயல தடுத்து ராவு கால பூஜை நடத்தின அந்த CID  என் அப்பா..எப்படியா இவரு நம்ம டிராமாவ நம்பலன்னு அப்படின்னு நான் யோசிச்சேன்..அப்புறம் தான் தெரிஞ்சுது..அவர் பாக்கெட்ல இருந்த 30 ரூபாயும் நானும் ஒரே சமயத்துல காணாம போயிருக்கோம்னு...( அப்போ எங்களுக்கு 30 ரூபாய் ஒரு மிக பெரிய அமௌன்ட்)....

இந்த சம்பவத்துகப்புறம் நமக்கு சொந்தக்காரங்க மத்தியில` ஊமை கோட்டான்`...`எவ்ளோ திமிரு பாரு`..`இதெல்லாம் எங்க உருப்பட போகுது`..அப்படின்ற பாராட்டையும்.....`செம தில்லு டா` ..`டேய் எப்படி டா இத பண்ண`...`எங்க இருந்து டா உனக்கு இம்புட்டு தைரியம் வந்துது` அப்படின்னு  சக வயசு பசங்க கிட்ட நம்ம இமேஜ் உயர்ந்தது நடந்துது..அப்பாவுக்கு ஓரளவு தலை குனிவுன்னாலும்..நல்ல வேளை அப்போவே எந்த பொண்ணையும் இழுத்துட்டு ஓடாம போனதால அவரோட மானம்  ஓரளவு காப்பாற்றப்பட்டது....

கொஞ்சம் வளர்ந்ததுகப்புரம்..நாங்க முன்னாடி இருந்த திருவல்லிக்கேணிக்கு போய்  இந்த ஸ்ரீ ஹரி,ராஜேஷ் அப்புறம் இன்னொரு நண்பன் ராஜ் குமார் இவங்கள தேடி போனேன்...இந்த ராஜேஷ் & ராஜ் குமார் இருந்த வீட்ட இடிச்சு ஒரு பெரிய அபார்ட்மென்ட் கட்டி இருந்தாங்க..ரொம்ப வெயிட் பண்ணி பார்த்தும்..ஸ்ரீ ஹரிய பாக்க முடில...(நல்ல வேளை அவங்க வீட்ல நான் யாருன்றதையே மறந்துட்டாங்க...)..இப்போ அந்த குழந்தைங்க வளர்ந்து பெரிய ஆளா ஆகி இருப்பானுங்க..எல்லாரும் என்ன மாதிரி குழந்தையாவே இருக்க முடியுமா....( நான் இல்லாம என்ன பண்றாங்களோ..)..அவங்கள பார்த்து இதையெல்லாம் பேசி சிரிச்சுட்டு வரலாம்னு போனேன்...முடியாம போச்சு..பாக்க முடியாம போனத விட..நான் பொறந்து, வளர்ந்து, விளையாடின  இடமெல்லாம் இப்போ இல்லையே அப்படின்ற வருத்தம் அத விட ஜாஸ்தியா இருக்கு...

இருந்தாலும் நாம வறுத்த படாத வாலிபர் சங்கத்துல ஆயுட்கால உறுப்பினர் அப்படின்றதால ரொம்ப பீல் பண்ணாம உங்களை....

                                                                                    நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

1 comment: