January 14, 2012

புத்தாண்டு..

புத்தாண்டு..இப்படின்னு சொன்ன உடனே..நமக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருது...புது வருஷம், எங்க பார்ட்டி, எப்படி கொண்டாடலாம், என்ன பண்ணலாம், இந்த புது வருஷத்துக்கு எத புதுசா ஆரம்பிக்கலாம், எந்த கெட்ட பழகத்த விடலாம் அப்படின்னு நமக்குள்ள பல புரட்சிகர சிந்தினைகள் வந்து போகும்.

ஆனா புத்தாண்டு அப்படின்ற ஒரு விஷயம் எனக்கு அவ்வளவா ஒரு சந்தோஷம் கொடுக்குற ஒரு முக்கிய நிகழ்வா நினச்சதில்ல...ஒரு நாள் லீவ் கெடைக்கும்...அந்த சந்தோஷத்த தவிர.. ஹேய்ய்ய்ய்....ஹோஓஒ.....புல்லா போதைல ஹாப்பி நியூஇயர்......அப்படின்னு கத்திக்கிட்டே....ரோட்ல யாருன்னே தெரியாத ஆளுங்களகட்டி பிடிக்கிறதும் கை கொடுக்குறதும் , மாடில, ஜன்னல் வழியா எட்டி பாக்குற பொண்ணுங்ககிட்டயும், அப்படியே அவங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்றவழக்கமும், இப்போ வந்துருக்குற புது  பழக்கமான sms , மெயில், facebook இதுல அப்படியே வாழ்த்து மழைங்கள குவிக்கிற பழக்கம்   நம்ம கிட்டஅவ்வளவா இருந்ததில்ல..இந்த புதுசா இந்த வருஷம் ஆரம்பிக்கணும் பெரிசாவும் எதையும் நினைச்சதில்ல...எத செஞ்சாலும் சும்மாசெய்வோமேன்னு செய்றதே பழக்கமாபோனதலா ஒரே ஒரு வருஷம் மட்டும்சும்மா மெரீனா பீச்சுக்கு போனதோட சரி..( இந்த வருஷமாவது புதுவண்டியும், ஒரு Girl Friend எப்படியாவதுஅரும்பாடு பட்டு முடிக்கணும்னுநெனைப்பேன், இன்னும் அதா நான்முடிச்சிட்டு இருக்கேன்...)  அப்புறம் என்னதான் டா..நினைப்ப...எதுக்கு இதையெல்லாம் எழுதி எங்க கழுத்த அறுக்குற அப்படின்னும் நெனைக்கலாம்....நியூ இயர் வெச்சு எதையாவது சாக்கா வெச்சுகிறுக்கலாம்..அதுக்கு தான்... 
 
ஒழுங்க படிச்சு பெத்தவங்க பேச்ச கேட்டு நடக்குரவணுக்கு தான் புத்தாண்டு, பொங்கல், பிறந்த நாள் அப்படி எல்லாம் கொண்டாடலாம், உன்ன மாதிரி உதவாக்கரைக்கு அதெல்லாம் ஏன் டா அப்படின்னு பொத்தாம் பொதுவாதிட்டுவாங்கினது போய், நியூ யிற்கு ஊருக்கு  வரியா டா....அப்படின்னு கேக்குற அளவுக்காவது வளந்துருக்கோம் அப்படின்னு ஒன்ன மட்டும் தான் நான் புத்தாண்டு நினைச்சு சந்தோஷ படர விஷயம்..மத்தபடிஒவ்வொவொரு வருஷமும் கடந்து போறது எனக்கு அவ்வளோ  சந்தோஷம் இல்ல...( வயசும் ஏறுது, ஆயுசுல ஒரு வருஷம் முடிஞ்சு போகுதல்லோ)... 
 
நமக்கு ஒன்னும் பெரிசா சாதிக்கிற லட்சியமெல்லாம் இல்லைன்னாலும்...இப்போதைக்கு கைக்கு எட்டுற தூரத்துல இருக்க எதையாவது நெனைச்சு அத செஞ்சு முடிப்போமேன்னு...நம்ம லெவல், ரேஞ்சு இத மனசில வெச்சுகிட்டு ஏதோ என் லெவெலுக்கு இருக்குற இசை கருவிவாசிக்கிற ஆளுங்கள ஒன்னு சேர்த்து ஒரு பேண்ட் மாதிரி ஆரம்பிக்கணும் இப்ப்போ  ஒரு பெண் பாடகிய புடிச்சிருக்கேன்...), Photography  பத்தி சின்னதா ஒரு கோர்ஸ் அப்புறம் அத வெச்சு ஒரு short  film எடுக்கணும், (அப்புறம் வழக்கம்போல ஒரு வண்டி, ஒரு Girl Friend ) இதெல்லாம் எங்க போய்முடியபோகுதுன்னு தெரில... 

சரி புது வருஷ வந்துருச்சு எதையாது எழுதி ஆரம்பிப்போம்னு நெனைச்சு நெனைச்சு எதுவும் கெடைக்காம சரி புது வருஷத்த பத்தியே எழுதி என் நேரத்தையும் அப்படியே உங்க நேரத்தையும் வேஸ்ட் பண்ணோம் அப்படின்ற லட்சியத்த அடைஞ்ச சின்ன சந்தோஷத்தோட.இத முடிக்கிறேன்...( ஆமா டைரக்டர் ஷங்கர் இவர அடுத்த படத்துக்கு கதை எழுத கூப்டாரு, இவரு யோசிக்கிறாரு

இந்த வருஷத்துக்குள்ள எழுத இன்னும் நிறைய இருக்கு....ஒன்னு ஒண்ணா ரிலீஸ் ஆகும்....

1 comment: