June 5, 2010

இந்நாள் நடிகனுக்கு முன்னாள் ரசிகனின் கடிதம்....

வணக்கம் Dr.விஜய் அவர்களே...

உங்களுடைய சுறா திரைப்படத்தை பார்த்து தற்கொலைக்கு முயன்ற மக்களில் நானும் ஒருவன்..( நல்ல வேலை download செய்து பார்த்தால் பணம் மிச்சம் ). நீங்கள் சொல்வது போல உங்களுடைய கோடான கோடி ரசிகர்கள் இத்திரைக்காவியத்தை முதல் நாள் பார்க்கும் போது அவர்களுடைய மனநிலை எப்படி இருந்ததோ தெரியவில்லை...ஆனால் நாங்கள் சராசரியாகவே இருந்தோம்..ஏனென்றால் உங்களிடம் நாங்கள் எதையும் எதிர் பார்த்து வரவில்லை...உங்கள் படத்தின் கதையையும் சேர்த்து...

முன்னாள் ரசிகன் என போட்டதற்கு மன்னியுங்கள்...முன்னொரு காலத்தில்..உங்களுடைய ஆளுயர போஸ்டரை எங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒட்டி மகிழ்ந்து..காலையில் உங்கள் திருமுகத்தை முதலில் பார்த்து புல்லரித்து போன காலங்கள் உண்டு...என்று வரை அந்த பூரிப்பு நீடித்தது....தங்களுடைய `நெஞ்சினிலே` என்ற கலை காவியத்தை பார்க்கும் வரை...அன்று கிழித்தவன் தான்......இன்று வரை கிழித்து கொண்டே இருக்கிறேன்....நீங்களும் மாறிய பாடில்லை...

பொதுவாக கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் அடித்து துவைத்த வில்லன்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள்..அவர்களே திருந்தி விட்டார்கள்....நீங்கள் இன்னும் திருந்த வில்லை...உங்கள் சமகால நடிகர்களை கொஞ்சம் உற்று பாருங்கள்.....
1. விக்ரம்....இவரை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை....சேது,பிதாமகன்,காசி,ஜெமினி,தூள்,சாமி,அந்நியன் ஏன் தோல்வியே அடைந்திருந்தாலும் பரவாஇல்லை கந்தசாமி.

2. சூர்யா..உங்களுடன் நேருக்கு நேர் ,பிரெண்ட்ஸ் படத்தில் நடித்து உங்களுடைய நடிப்பிற்கும், நடனத்திற்கும் ஈடுக்கொடுக்க முடியாமல் திணறுகிறார் என்று விமரிசனம் செய்தார்கள்....அனால் இன்று...நந்தா, பிதாமகன்,காக்க காக்க, கஜினி, அயன் என்று அவர் தொட்ட உயரங்கள்....?

அவர்கள் நடித்த கடைசி பத்து படங்களின் போட்டோ ஆல்பமும், உங்களுடைய கடைசி பத்து படத்தின் போட்டோ ஆல்பத்தையும் எடுத்து பார்த்தால் உங்களுக்கே புரியும்....கண்டிப்பாக அவர்கள் அவர்களாகவே இருக்க மாட்டார்கள்.....அவர்களுடைய புகைபடத்தை பார்த்து என்ன படம் என்று சொல்லுமளவுக்கு அவர்கள் போட்ட வேடங்கள் அனைத்தும் பிரபலம்...ஆனால் உங்கள் ஆல்பத்தை பார்த்தால் உங்களுக்கே குழப்பம் வரும்...இது எந்த படம் என்று...குறைந்த பட்சம் முடியை கலைத்து விட்டுருந்தால் கூட தெரியும்...அதை கூட உங்களால் செய்ய முடியவில்லை...

அவ்வளவு ஏன்....உங்களுடைய எதிரி என்று நீங்கள் அழிக்க நினைத்த அஜித்....உங்களை போல் நடனத்தில்,தமிழ் வசன உச்சரிப்பில்,சண்டை காட்சியில்,நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதில்.....என்று திரைப்படத்திற்கு தேவையான அத்தனை முக்கியமான அத்தனை அம்சத்திலும் உங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியே இருக்கிறார்..இப்பொழுது அவருக்கு கூடும் கூட்டத்தை நீங்கள் பார்கிறீர்கள் தானே....வாலி, வில்லன், முகவரி, சிடிசன், வரலாறு, கிரீடம், பில்லா இவற்றை ஒன்றோடொன்று நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்..அவர் பேசும் வசனங்களை வைத்து அவரை வம்பிக்கிழுப்பது..வயிற்றில் துணியை கட்டி கொண்டு தொப்பை இருப்பது போல் காட்சி தருவது...இதெல்லாம் படித்த ஆறறிவுள்ள, இயல்பான மனிதர்கள் செய்யும் செயலா, அல்லது ஏர்வாடியில் இருப்பவர்கள் செய்ய கூடியதா.. இப்படி நடந்து கொண்டால் படித்த கூட்டம் எந்த பக்கம் சாயும்...

இதெல்லாம் போதாது என்று உங்களுக்கு அரசியல் ஆசை வேறு..முன்பே எழுதி இருப்பது போல்..ராகுல் காந்தியை சந்தித்தது..உங்களுகென்று ரசிகர் மன்ற கொடி அதில் ` உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும்` என்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் வாசகம்,அவ்வளவு ஏன் உங்களுடைய தற்போதய காவியம்..சுறாவில் இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரெச்சனை என்று உங்கள் மனம் போன போக்கில் வசனம் வேறு...நம்பிக்கையோடு இருங்கள் நல்ல காலம் வரும் என்று...

இப்போது ஹைதராபாத் வந்திருப்பதால்...நீங்கள் இங்கிருக்கும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் இவர்களிடமிருந்து நீங்கள் என்ன சுட்டு எடுத்து இருக்குறீர்கள் என்பது தெரிகிறது..இங்கிருப்பவர்கள் தமிழகத்தை பற்றி எப்படி மோசமாக பேசினாலும் பதிலடி கொடுக்க என்னால் முடிகிறது.....ஆனால் அவர்கள் உங்கள் பெயரை உச்சரித்த அடுத்த கணம்...நான் என் தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டிருக்கிறது...

உங்களுக்கு ஒரே வேண்டுகோள்..உங்களை நாங்கள் கார்கில் முனைக்கு சென்று தீவிரவாதிகளை அழிக்க சொல்லவில்லை, மரத்திற்கு மரம் தாவாமல் ஒரு படமாவது நடியுங்கள்...ஊரிலிருந்து கிளம்பி வந்து நீங்கள் சென்னையை அமைதி பூங்கவாகியது போதும்...எங்கள் மானத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் முறையிடவில்லை....உங்கள் மானம் காற்றில் பறந்து கொடிருக்கிறது...அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்....

உங்களுடைய வேட்டைக்காரன், சுறா போஸ்டரில் அனுஷ்க்காவையும், தமன்னவாயும் வைத்து அடையாளம் சொல்லும், வேறு எந்த வித்யாசமும் இல்லாத இப்போதைய நிலைமையை மாற்றி உங்களை பார்த்து இது முந்தைய படத்திற்கு மாறுபட்ட படம் என்று சொல்ல வைக்கும் நிலைமையை வரவைக்க பாருங்கள்.....இந்த மாற்றத்திற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....