December 4, 2011

என் ஊர்...

நாம் பிறந்த மண் அதுக்கு எதாவது செய்யனும்னு எல்லாருக்கும் ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும்..எனக்கும் இருக்கு..ஆனா அத இப்போ செய்யமுடியாது...நான் பொறந்த நாட்டுக்கு எதாவது  செய்ரோமோ  இல்லையோ, இருக்குற தமிழ் நாட்டுக்கு எதாவது செய்ரோமோ  இல்லையோ...குறைஞ்சபட்சம் நான் இருக்குற தெருவுக்காவவது  ஏதாவது செய்யனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருக்கேன்...சென்னைலயே நான் பொறந்தது ஒரு இடம், வளர்ந்தது இன்னொரு இடம், இப்போ பிழைக்க வந்தது இன்னொரு இடம் (ஊருன்னு கூட சொல்லலாம்)....அந்தந்த ஊர பத்தின எனக்கு தெரிஞ்ச விஷயத்த இங்க சொல்லணும்...அதான் மேட்டர்....

1 . நூத்திஎட்டு திவ்ய தேசங்கள்ல ஒண்ணான பார்த்தசாரதி கோயில், இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச், தேசியகவிஞர் பாரதியாரோட வீடு, 150 வருஷத்துக்கும் மேலா இருக்குற சென்னை பல்கலைக்கழகம், கமல் படிச்ச ஹிந்து உயர்நிலை பள்ளி, ரஜினி அடிக்கடி வந்து போற ராகவேந்திரா கோயில், கற்ப்புக்கு (?!) இலக்கணமா இருந்த, இருக்குற கண்ணகி சிலை,பழமையான லேடி வெல்லிங்டன் பள்ளிக்கூடம். கடற்கரை காத்தோட அடிக்கிற மீன் வாசம், பள்ளி வாசல்ல இருந்த வர தொழுகை சத்தம், எல்லா மொழிக்காரனும் வசிக்க வசதியான மேன்சன், மீன்பிடிப்பவர்கள், லோக்கல் தாதா, ஹிந்து  முஸ்லிம் பிரச்சன இப்படி இதையெல்லாம் டீல் பண்ற எப்பவும் பரபரப்பா இருக்கு ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம்,இப்படி எனக்கு தெரிஞ்ச, இன்னும் தெரியாத எப்பவுமே பரபரப்பா இருக்குற...கோவில் குளத்துல நெறைய அல்லி மலர்கள் இருந்ததால திருஅல்லி கேணி பின்னாளில் தேய்ஞ்சு மருவி பேர் மாறி போன திருவல்லிக்கேணி  தான் நான் பொறந்த ஊர் ( பொறந்தது சேத்பட் மேத்தா நர்சிங் ஹோம்)...வீட்ல இருந்து பத்து நிமிஷத்துல நடந்து போனா மாறின பீச், நண்பர்கள் வட்டம், காத்தாடி பிடிக்க  ஒட்டு வீடு மேல ஓடிப்போனது,நெனைச்சு பார்க்கும் போதே உடனடியா பன்னிரண்டு வயசுக்கு போற மாதிரி சூப்பரனா  சம்பவங்கள் நெறைய இருக்கு..ஹிந்து ஸ்கூல் படிப்பு, வர வழில பார்த்தசாரதி கோயில் குளத்துக்குபோய் அடிவாங்கின தழும்பு இன்னமும் இருக்கு..அங்க இருக்கும் போது இருந்த ஒரு பெரிய நட்பு வட்டம், இப்போ ஒருத்தர் கூட டச்ல இல்லாம இருக்கிறது மட்டும் ஒரு மிக பெரிய வருத்தம்..இப்போவும் 21G , 45B பஸ் போகுறப்போ அத நான் பாக்கும் போது அதுல ஏறி சும்மாவாவது அங்க போகணும்னு நெனைப்பேன்...(பஸ் டிக்கெட் விக்கிற விலைல சும்மாலா போகமுடியுமா.)...

 2 . நான்  போற வரைக்கும் இந்த ஊர் அவ்ளோ பிரசித்தி பெற்ற ஸ்தலமான்னு எனக்கு தெரில, ஆனா நான் போன பிறகு ஆயுடுச்சு...(என்னாலா தான் ஆச்சுன்னு தப்பா நெனைக்காதீங்க) க்ரோம் லேதெர் பாக்டரி இருந்து, அதுல எங்க ஊரே ஒட்டு மொத்தமா வேல செஞ்சதால இப்போ என்னோட ஊருக்கு குரோம்பேட்டை அப்படின்னு பேர் வந்துது..ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குஅடுத்தபடியா எங்க ஊர்ல இருக்குற திருநீர்மலை ரங்கநாதர கேள்விபடாத பக்திமான்களே இருக்க மாட்டங்க..குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு சொல்லுவாங்க ஆனா அவர் இருக்குற இடத்துக்கு நாங்க வெச்சபேரே குமரன் குன்றம் தான்...ரொம்ப சக்தி வாய்ந்தவர்னு சொல்றாங்க...இப்போ சென்னைலயே மிக முக்கியாமான மகளிர் கல்லூரிகள் லிஸ்ட் எடுத்தோம்னா எங்க ஊர்ல இருக்குற வைஷ்ணவா கல்லூரி முதல் ஐந்து எடதுக்குள்ள வரும்..அப்படி ஒரு பேரு பெற்ற ஸ்தலம்..ஒரே ஒரு தரம் பத்தாவது, மற்றும் பன்னிரெண்டாவது பரிட்சய எழுதி பாஸ் பண்ணது, பல தடவ கல்லூரி பரீட்சை எழுதினது, முதல் சண்டை, முதல் காதல் இப்படின்னு என்னோட பல முதல்களுக்கு முதல் போட்ட இடம்..சென்னை விமான நிலையத்துல இருந்து அஞ்சு கிலோமீட்டர் தான் என் ஊர்,எந்த நேரத்துலயும் எந்த இடத்துக்கும் போக வசதியான போக்குவரத்துக்கு நான் உத்தரவாதம், மாநகர பேருந்துக்கு பாடி கட்டும் தொழிற்சாலையே எங்க ஊர்ல தான் இருக்கு..இப்போ மத்திய அமைச்சர் திரு ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான தாகூர் மருத்துவ கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ரெண்டு மூணு பள்ளிக்கூடம் இப்படின்னு ஏரியாவே கல்வி மயமா மாறிடுச்சு அவரும் கல்வி தந்தையா ஆயிட்டாரு..நான் படிச்ச அரசு ஆண்கள்மேல்நிலை மாணவர்கள் இன்னமும் பக்கத்துல இருக்குற பொண்ணுங்க படிக்கிற பள்ளிகூடத்துல ராக்கெட் விட்டுட்டு இருக்காங்க..(ட்ரெண்ட மாத்தவே மாட்டனுங்க போல)..இங்கொன்னு அங்கொண்ணுமா இருந்தவீடு, நெறைய மைதானம்னு இருந்த ஊரு இப்போ கால் வெக்க இடம் இல்லாம இருக்கு...அது ஒரு சின்ன வருத்தம்.

3.  இப்படி எல்லாம் குண்டு சட்டில குதிரை ஓட்டிட்டு இருந்த எனக்கு, போடா ஊற விட்டு அப்போ தான் நீ உருபடுவ..என்ன தொரத்தி அடிச்சது.....அப்புறம் நான் வந்து சேர்ந்த ஊரு ஹைதராபாத்..`தம்புடு  ஏமி மாட்லட்துன்னாவ், நாக்கு தமிழ் ராது...`இப்படின்னு ரயில விட்டு இறங்கினதும் எவனா பேசினா அடுத்த ரயில புடிச்சு திருப்பி ஊருக்கு ஒடனும்னு தோணுமா தோணாதா...சார்மினார், லும்பினி பார்க், ஹுசைன் சாகர் ஏரி, முத்துக்கள், காரமா சாப்பிடறது..இப்படிவெளி உலகத்துக்கு தெரிஞ்ச விஷயத்த விட தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு..அது இந்த ஊர்ல இருக்கணும்னா உங்களுக்குவயிறு வேணும்...சென்னை எக்ஸ்பிரஸ் வண்டில இருந்து செகந்தராபாத் வந்து காலைலமணிக்கு இறங்கினா உங்களுக்காக சாப்ட ரெடியா கிரில் சிக்கென், தந்தூரி, கைமா இப்படி பல விஷயங்கள் உங்களுக்காக காத்துட்டு இருக்கும்..சைவம் சாபிட்ரவங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் இங்க உயிர் வாழனும்...இங்க கிடைக்குற இராணி டி , ஒஸ்மானியா பிஸ்கட், சமோசா, கராச்சி பேக்கரி, ஒரு டி கடைக்கு போனா கூட வயிறு ரொம்ப விருந்து சாப்டு வரலாம்..இவ்ளோ சொல்லியாச்சு...ஹைதராபாத் பிரியாணி பத்தி சொல்லாம போனா கோழி இனமே என்னை கொலை பண்ணிரும்...முழு பூசனிக்காய சோத்துல மறைக்குர  பழமொழி எப்படி நம்ம ஊர்ல இருக்கோ, அதே பழமொழிய இங்கஒரு முழு கோழிய சோத்துல மறைச்சு நடைமுறை படுத்திட்டு இருக்காங்க, சித்திக் கபாப் அப்படின்னு ஒரு இடம் இருக்கு அங்க போனீங்கன்னா....குடும்பம் குடும்பமா ஒரு கோழி பரம்பரையவே தூக்குல தொங்க விட்ருப்பாங்க..உள்ள போனீங்கன்ன உங்க பாக்கெட்டும் சேதாரம் வராம, வயிறும், மனசும் நெறைஞ்சு தான் வெளில வருவீங்க..எப்படி இந்த ஊர்ல காலம் தள்ள போறோம்னு பயந்துட்டு வந்தகாலம் போய் இந்த ஊருக்கே அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்துரணும்னு நினைப்பு வர காலம் வந்துருச்சு...அப்பப்போ வர தெலங்கான பிரச்சனைய தவிர இந்த ஊர் நல்ல ஊர் தான்...தமிழ் பேச்ச இனிமே கேக்க முடியுமான்னு நெனைச்சுட்டே வந்தேன் ஆனா 10 லட்சம் தமிழர்கள், தமிழ் சங்கம், தமிழர்களுக்குன்னு தனி பள்ளி கூடம், தனி ஏரியா இப்படி நிறைய விஷயத்த பாத்து மிரண்டு போய்ட்டேன்...நம்ம பெங்களுர் மாதிரி இல்லாம எல்லாருக்கும் குறிப்பா தமிழர்கள் எல்லாரும் பாதுக்காப்பா இருக்க ஒரு நல்ல ஊரு ஹைதராபாத்....

இதெல்லாம் இல்லாம நான் படிச்ச `நந்தனம்` கல்லூரியும் அப்போ சுத்தின சைதாபேட்டையும் என் ஊர் அப்படின்னு சொல்ற அளவுக்கு மேல....அத பத்தி தனியாவே எழுதணும்..ஆனா.... 
 
இந்த மாதிரி நெறைய விஷயம் இருக்கு எழுத, பேச...எல்லா விஷயத்தையும்  ஒரே சமயத்துல எழுத முடியாததுல ஒரே  வருத்தம்  எனக்கு,,,இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா அந்த மாதிரி விஷயத்த.............
                                                                                                                                 
                                                                                                         போட்டு வாங்குவோம்....

3 comments:

 1. அப்ப்டின சார் ஹைதராபாத் செட்டில் ஆகா போறீங்க கரெக்டா................வழத்துகள்

  ReplyDelete
 2. yenna sugan?? kalakara... oru parthiban unakkula olinjittu irukaarunu nenaikirean..

  ReplyDelete
 3. Edho ennaala mudinjadhu....pannitrukkaen....