May 21, 2011

ஓடிப்போனவன்...

வணக்கம்..

இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் நூறு சதவிகிதம் உண்மையே, கொஞ்சம் கூட கலப்படம் இல்லாத அக்மார்க் உண்மை கதை..

நம்ம கதையின் நாயகன் இருக்காரே, அவரு பேர ஓடிபோனவன்னே வெச்சுக்கலாம்..அவரு ஒரு MCA பட்டதாரி. அடிபடையில் இருந்து ஆரம்பித்து அமெரிக்கா வரை சென்று பணி புரிந்துள்ளார், கடவுள் பக்தி என்பது இந்த காலத்து யூத் (யூத்தா?) மத்தியில் இல்லை என்பதை தவிடு பொடியாக்க வந்தவர்,மேல் மாடி அதாவது மூளை அதிகம், எல்லாவற்றையும் தீர அலசி ஆராய்பவர், கடவுள் விஷயம் என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்.இப்போது Facebook ல அரசியல் பேசுறாங்களே சில பேர் அவங்களுக்கு முன்னாடில இருந்து இவரு தி.மு .க. பண்ண தப்புகள அங்க பதிவு பண்ணவர், எங்களுக்குள் நெறைய வாக்கு வாதங்களுக்கும் வித்திட்டவர், இப்படி பட்டவருக்கு ஏன் இந்த ஓடிப்போனவன் என்ற அவப்பெயர்...மேலும் அறிய... கீழே படியுங்கள்..

நான் இப்போ இருக்குற ஆண்கள் விடுதில ரெண்டாவது மாடில இருக்கேன், சார் நாலாவது மாடில இருந்தார், அவரு வந்த புதுசுலேயே கடவுள் எங்க 2 பேர் வாய்ல மாட்டிட்டு படாத பாடு பட்டாரு.திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாரு எங்கடான்னு விசாரிச்சா கனவு காணும் நாடான அமெரிக்கா போயிட்டாருன்னு சொன்னாங்க, ஒரு 6,7 மாசம் கழிச்சு திரும்பி வந்தாரு ஹைதராபாதுக்கே, வந்த உடனே நேரா நாலாவது மாடில இருந்தாரு...தனியா...என் வாய வெச்சுட்டு சும்மா இருக்க கூடாது...ஏன்யா இங்க தனியா தானே இருக்க அதுக்கு என் ரூமுக்கு வந்துருன்னே நானே வலிய பொய் கூப்டேன், தலைவன் வந்தான்..

எங்களுடைய ஒன்றாக இருக்கும் படலம் ஓரளவு அமைதியா தான் போயிட்டு இருந்துது, எது வரைக்கும்....சந்தீப் மற்றும் அருண் என்ற இரண்டு மலையாள மந்திரவாதிகள் எங்க நட்புக்குள்ள நுழையுற வரைக்கும்..இந்த 2 VIPs யாருன்னா நம்ம ஓடிப்போனவன் வேல செய்ற கம்பெனில புதுசா பொறியியல் படிப்பு முடிச்சிட்டு வந்த ஜூனியர் பய புள்ளைங்க..இந்த பாழா போன நேரத்துலயா என் பொறந்த நாள் வரணும்..அது வந்ததுனால நைட் 10.30 மணிக்கு இவனுங்க வந்தானுங்க..வாழ்த்து சொல்லன்னுமாமா...வாழ்த்து சொல்ல வந்துதுங்களே வாழ்த்திட்டு போகாம. எங்களுக்கு மலையாளம் தெரியும், மலையாள பிட்டு தெரியும், மாந்தரீகம் தெரியும்னு கத விட்டு முட்டை வைப்பது, எலுமிச்சை பழத்தில் மந்திரம் செய்வது, பொம்மையில் ஊசி குத்துவது போன்ற செயல்கள் எல்லாம் அவன்ட்ட சொன்னானுங்க, அதோட நிறுத்தாம உங்களுக்கு கெடைக்க வேண்டிய பெங்களூர் Transfer இப்போ எங்களால தான் நிக்குது, வேணும்னா என்ன கேளுங்கன்னு வேற ஊதி விட்டுட்டு போய்ட்டானுங்க பரதேசி பசங்க...இந்த கதைய இவனுங்க நைட் 11.30 மணிக்கு முடிசானுங்க அதுக்கப்புறம் அவன் 12.30 மணி வரைக்கும் நான் பேய் கிட்ட பேசினேன்னு சொன்னேனே நீ கேட்டியா , இவனுங்க தீய சக்தி,அடுத்த இலக்கு நீ தான், நான் கோவில்ல படிச்சிருக்கேன் அதனால இந்த தீயசக்தீங்கள நான் சமாளிச்சுப்பேன், ஆனா உனக்கு கடவுள் நம்பிக்கை வேற இல்லஅப்படினெல்லாம் சொன்னான். அந்த தீயசக்தி யாருன்னு சொல்டா நானாவது தப்பிசிக்குரேன் அப்படின்னு கேட்டா அவரு சொல்ல மாட்டாராம், சொன்னா அவர் உயிருக்கு ஆபத்தாம், என்னங்கடா இது..( இத சொல்லும்போது என் Basement கொஞ்சம் வீக் ஆச்சுன்னாலும் அவன் சொல்லும்போது காமெடியா இருந்துது சிரிச்சிட்டேன்)

இதுல ஆரம்பிசுதுயா போற எடமெல்லாம் அந்த 2 பேரும் எதாவது கனவுல பிரெண்ட் செத்து போனான் அது உண்மையிலேயே நடந்துது, சிவகாமின்னு ஒரு பொண்ணு சூப்பரா இருப்பா , `உங்க கதைய முடிச்சாச்சு`அப்படின்னு பல்ல கடிச்சிட்டு பேசுவானுங்க. இவனும் அவனுங்கள, டேய் இவனுங்க 2 பேரும் ``அதான் டா`` அப்படின்னு பீல் பண்ணுவான்..நடுவுல கொஞ்சம் அட்வைஸ் நடக்கும் எப்படின்னா அந்த பசங்க கிட்டே போய் இந்த சக்தி உனக்கு இருக்குறத யார் கிட்டயும் சொல்லாத...தப்பா யூஸ் பண்ணிருவாங்க...அப்படின்னு..( ஓடிப்போனவன் என்னை மன்னிக்கணும், அவங்கள இப்படி எல்லாம் பேசுங்கடான்னு சில விஷயத்த சொல்லி கொடுத்தது நான் தான்...)

ஆனா நம்ம பசங்க எப்படினா ரொம்ப ரொமாண்டிக் ரோமியோக்கள், ஒரே சமயத்துல 4,5 பிகர்கள ஓட்றது, ஒட்டின பிகர் கிட்டயே அடி வாங்குறது, இதுல கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒரு பச்ச மண்ணை அதாவது என்ன இதுல இழுத்து விட்டு பஞ்சாயத்து பண்ண சொல்றது, அந்த பொண்ணு என்னடான்னா அண்ணன் சொன்னதுனால இல்லாட்டி உங்க கதைய முடிச்சிருவேன்னு பயமுறுத்துறது, லவ் பெய்லியர் ஆகி தோழி , கோழின்னு புக் எழுதுறதுன்னு, நைட் 11 வேலைக்கு போயிட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு வரதுன்னு இப்படி அவனுங்களே செய்வினை வெச்ச மாதிரி தான் அலைவானுங்க..அவனுங்க எங்க அடுத்தவனுக்கு செய்வினை வெக்குறது சொல்லுங்க...

அவரோட Facebook Profile போடோஸ் எல்லாத்தையும் பாத்தீங்கன்னா....மகா காளி, ஜோசியம் பாக்குறவன் இந்த Universal System போட்டோ வெச்சுருப்பானே அது, இப்படீன்னு Terror ஏற்படுத்துற புகைப்படங்கள் தான்..ஆத்திர அவசரத்துக்கு உதவும்னு அவரோட போடோஸ் ஒரு 2,3 காப்பி பண்ணி வெச்சுருந்தேன் இங்க போடலாம்னு பாத்தேன்..வேண்டாம்...( Latest Update: என்னையும் அந்த 2 பேரையும் Facebook பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாரு..)

இதுக்கு நடுவுல எனக்கும் ஓடிப்போனவருக்கு அரசியல் பேச போய் அது சண்டைல முடிஞ்சுது, அப்பவும் தலைவன் டீசென்ட்டா தான் நடந்துகிட்டான்..என்ன அப்புறம் அவன் ரூமுக்குள்ள வரதே இல்ல, அவருடைய மடி கணினியை ஒரு நாளைக்கு குறைஞ்சது 15, 16 மணி நேரமாவது வேல வாங்கிட்டு அப்புறம் ஹால்ல தூங்குவாரு..(தூங்குவாரான்னு தெரில)... அந்த திறமைய அவர்ட்ட இருந்து வளத்துகனும்னு பாத்தேன் முடில..

நம்ம ஓடிப்போனவனுக்கு கடைசியா transfer கெடைச்சது, ஆனா அத யார் கிட்டயும் சொல்லாம காய்கறிகளை மட்டும் சாப்பிடும் இந்த மந்திரவாதி Gang ல இருக்குற ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கான்,அவனுக்கு மட்டும் treat தரேன்னு நம்ம ஓடிப்போனவர் வாக்குறுதி கொடுத்திருக்கார்...அவன் இத எல்லார்கிட்டயும் அள்ளி தெளிசுட்டான்..கிட்ட தட்ட ஓடிப்போனவன் என்னைக்கு ஒடப்போரானு எங்களுக்கு தெரிஞ்சாலும், அவன் அத அவன் வாயல சொல்லவே இல்ல..Treat கேட்டதுக்கும் உங்களால நான் அனுபவிச்சது போதும், இதுல உங்களுக்கு Treat ஒரு கேடா..அப்படின்னு கேட்டு அசிங்க படுத்தி இருக்கான், மே 14, சனிக்கிழமை காலைல 7.15 கிட்டயும் நான் ஜிம் கெளம்பும்போது நல்லா தூங்கிட்டு இருந்தான்யா, 9.30 மணிக்கு வந்து பாக்குறேன் ரூம காலி பண்ணிட்டு போயட்டான்யா...

இப்படி அவன் மேல நாங்க பாச மழையா மொண்டு மொண்டு ஊத்தி இருக்கோம், அப்படியும் எங்க கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம எஸ்கேப் ஆயிட்டான்யா, இத்தனைக்கும் அவன் எல்லாத்தையும் மூட்ட கட்டும்போது..என்னுடைய இன்னொரு ரூம் மேட் அங்கேயே தான் இருந்துருக்கான், நம்மாளு ஓடிபோரதுல கவனமா இருந்தாரே தவிர, யார்கிட்டயும் சொல்லனும்னு அக்கறை இல்லாம போச்சேப்பா..

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் மனம் எங்களுடையது, நீ இல்லாமல் இந்த ஹைதராபாத் நகரத்தில் இந்த விடுதியில் நாங்கள் கடத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் மறுபடியும் நேரில் சந்திக்கும் போது கூறுகிறோம் ( மறுபடியும் சந்திக்கணுமா......)....

வாழ்க உன் நட்பு, வாழ்க உன் மனிதர்களை மதிக்கும் மாண்பு....

No comments:

Post a Comment