June 24, 2011

சென்னையில் ஒரு ரயில் பயணம்..

வணக்கம்,

ஒரு நாளைக்கு லட்சக்கணக்குல ஆட்கள ஏத்திகிட்டு எந்த Traffic Jam ளையும் மாட்டாம, கரெக்டான நேரத்துக்கு கொண்டு போய் விடற சென்னைல ஓடற மின்சார ரயில பத்தி எழுதனும்னு எனக்கு ரொம்ப நாள் விருப்பம், ஏன்...நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நானும் அதுல பயணம் செஞ்சுருக்கேன்,வேலைக்கு போக ஆரம்பிச்சதுகப்புரம் அந்த 5 வருஷத்துல நான் ரயில்ல போகாத நாளை விரல் விட்டு எண்ணிடலாம். இனிமே என்னால பாக்க முடியுமான்னு நெனைச்ச பல பேர இந்த ரயில்கள் எனக்கு கண்டுபிடிச்சு கொடுத்துருக்கு, பலபேர் என் கண் முன்னாடி விழுந்த சாகுற காட்சிய பாக்குற அதிர்ச்சிய கொடுத்துருக்கு, என்னோட தோத்துபோன காதல வளர்க்க பயன்பட்ருக்கு..இப்படின்னு இன்னும் நெறைய இருக்கு...அது எல்லாத்தையும் பாப்போம்...

ராயபுரத்த தலைமை இடமாக்கொண்டு 1931 ஆரம்பிச்ச இந்த சேவை நாளுக்கு நாள் வெற்றி அடைஞ்சு இன்னைக்கு மும்பைக்கு சவால் விடற அளவு நாம வளந்துருக்கோம். சென்ட்ரல்-ஆவடி-பட்டாபிராம்-அரக்கோணம்-திருத்தணி, சென்ட்ரல்-கொருக்குபெட்டை-எண்ணூர்-தடா-சூளூர்பேட்டை, பீச்-தாம்பரம்,தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-திருமால்பூர், இது இல்லாம பீச்-திருமயிலை-வேளச்சேரி அப்படியே பரங்கிமலை வரைக்கும் extend பண்றாங்க, தனியா தலைக்கு மேல இப்போ இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ரோ ரயில் வேற வர போகுது.. இப்படி சென்னைலயே பொறந்து வளந்தவன், ரொம்ப நாளா ரயில்ல போறவனுக்கு கூட எவ்ளோ தூரம் இந்த ரயில் வசதி இருக்குன்னு தெரியாத அளவு விஸ்தாரமா கிட்ட தட்ட 300KMS மேல இந்த மின்சார ரயில் வசதி மட்டும் இருக்கு..

College முடிச்சிட்டு அரியர்ஸ் வெச்சுட்டு சும்மா சுத்திட்டு இருக்கானே அப்படின்னு எங்கப்பா என்ன Medical Transcription Course சேத்து விட்டாரு..இது ஜூலை 2004, அப்போ தான் இந்த தாம்பரம் - எழும்பூர் Meter Guage எல்லாம் Broad Guage மாத்துறவேல ஆரம்பிச்சுது..கெளம்பும்போதே நானும், எமது நண்பரும் இன்னைக்கு எப்படி படிக்கலாம் அப்படின்னு யோசிக்காம, ஒரு பக்கம் போற Meter Guage ல போலாமா இல்ல அந்த பக்கம் போற Braod Guage ல போலாமா அப்படின்னு யோசிப்போம்..(இப்படி எங்க படிப்ப கெடுத்ததுல ரயில்வே துறைக்கு முக்கியபங்கு இருக்கு..)..அக்டோபர் மாசம் முப்பதாம் தேதின்னு நெனைக்குறேன்.அன்னைக்கு தான் இந்த Meter Guage கடைசியா ஓடினநாள்...எங்க ஏரியா சமூக சேவகர் திரு.சந்தானம் அவர்கள் ரயில்ஓட்டிட்டு வந்த டிரைவர்ஸ் எல்லாருக்கும் மாலை மரியாதை, ட்ரெயின் நிறுத்தி போடோஸ் எடுத்தது, அன்னைக்கு கடைசியா வந்த `மகளிர் மட்டும்` வண்டில பெண் பயணிகள் கண் கலங்கி அழுதது, இப்படி கூட இந்த வண்டி மேல அட்டாச் ஆனா ஆளுங்க இருக்காங்களா அப்படின்ற மாதிரி நெறைய காட்சிகள அன்னைக்கு நான் பாத்தேன்..அப்போ பயணம் செஞ்சப்போ எடுத்த டிக்கெட் கூட ரொம்ப நாள் வெச்சுருந்தேன்..

மொத்தம் 8 அல்லது 9 பெட்டிகளாஇயக்கிக்கிட்டுருந்த இந்த மீட்டர் கேஜ் வண்டி பிற்பாடு அகல ரயில் பாதையா மாறினதுகப்புரமும் தொடர்ந்தது..அப்புறம் இப்போ 12 பெட்டி வரைக்கும் இருக்கு, இப்போ 15 வரைக்கும் ஆக்க போறாங்களாம்...இப்போ தனியா `மகளிர் மட்டும்` வண்டி விடாம இந்த 12 பெட்டி வண்டியிலேயே 7 பெட்டி பெண்களுகென்று தனியாக DEDICATE செய்யப்பட்டுள்ளது...

இந்த ரயில் பயணம் இருக்கே நிமிஷ கணக்கோ, மணி கணக்கோ பயணம் பண்ற நேரம் ரொம்ப அருமையா இருக்கும். காலைல ஒரு 8 மணிக்கு ஆரம்பிக்கும் அந்த கூட்டத்துல, வேலைக்கு போற அவசரத்துல ரயில்ல தான் ஏறுரோமா இல்ல அடுத்தவன் கால் மேல ஏறி போறமா தெரியாத அளவு கூட்டம் இருக்கும், அப்படியும் கால மிதிக்காம போங்க சார்ல ஆரம்பிச்சு - ஏன் டா கால மெறிக்கிற சாவுகிராக்கி... அப்படி மரியாதை - மரியாதை இன்மை இப்படி 2 விதமான மக்களையும் பாக்கலாம்.அந்த கூட்டத்துலயும் ஒருத்தர் கைகுட்டைவிப்பாறு வீட்ல இருந்து கெளம்பும்போது அவசரத்துல மறந்து வெச்சுட்டு வந்தவனெல்லாம் வாங்கிக்கலாம் (உண்மையிலேயே நல்லா இருக்கும்).இதுக்கு மேல ரயில்ல உள்ள வர பாதையில நின்னுட்டு வழி விடாம நிக்குறது, Korean மொபைல்ல பொண்ணுங்கள கிண்டல் பண்ற பாட்டுகள் சத்தம் போட்டு வெச்சு கேக்குறதுன்னு...படிக்கட்டுல இருந்து இறங்கும்போதே ரயில்ல ஏர்றது, தண்டவாளத்த தாண்டி எகிறிகுதிச்சு வருவது, ரயில நிலையத்துக்கும் பொது இடத்துக்கும் நடுவுல fencing போட்ருப்பாங்க அதுல இருக்க சின்ன கேப் மூலமா வரது இப்படி நெறைய வழிகள் இருக்கு.. இப்படி நெறைய `இப்படி கூட நடக்குமா விஷயங்கள் இருக்கு`..(இந்த கூட்டத்துலயும் ஓரமா லவ் பண்ணுவாங்க பாருங்க...அப்பப்பா சுத்தி யாருமே இல்லன்னு நெனைச்சுக்குவாங்க போல...)

சரி காலைல தான் இப்படி அவசரம் அவசரமா போறோமே நைட் ரிட்டன் அமைதியா வருவோம்னு பாத்தா....கலைஞர், ஜெயலலிதா, கமல், ரஜினி, அஜித், விஜய், சச்சின், டோனி, பெரியப்பா, சித்தப்பா,பக்கத்துக்கு வீட்டுக்காரன்,எதிர் வீட்டுக்கறான் இப்படி எல்லார் மேலயும் புழுதி வாரி தூத்துறதும் நடக்கும், புகழ் மாலை சூட்டுறதும் நடக்கும்...நிறுத்தி நிதானமா பேச நேரம் எங்களுக்கு இப்போ தான் கெடைக்கும். "உங்கம்மட்ட சொல்லி வைங்க ரொம்ப பேசுறாங்க, அப்புறம் பாருங்க" மனைவி கணவனிடத்தில், "மச்சான் இன்னைக்கு மாட்னா டா கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல வெச்சு சொல்லிட்டேன் டா".இரண்டு நண்பர்களின் உணர்ச்சி குவியல், " இவன் சரி பட்டு வர மாட்டான்ய வர எலக்ஷன்ல நம்ம வேலைய காமிச்சாதான் இவனுங்க சரி பட்டு வருவானுங்க"இரண்டு அன்கிள்களின் கோபம்," "அய்யயோ வாங்கின தக்காளிய கடைலயே மறந்து வெச்சுட்டேன்" நடுத்தர தம்பதிகளின் வருத்தம்னு இப்படி எல்லாத்தையும் கேக்கலாம்.இந்த ஹைதராபாத் வந்துதான் இந்த காதுல ஒன்ன மாட்டிட்டு பாட்டு கேக்குற பழக்கமெல்லாம்.இல்லாட்டி இந்த மாதிரி கதைய கேட்டுட்டு இப்போ Society எப்படி இருக்குன்னு Latest Update பண்ணி வெச்சுப்பேன்..இதுக்கு நடுவுல வழக்கம் போல நம்ம வயிதெரிச்சல ஜாஸ்தி பண்ற காதலர்கள், Korean மொபைல் இசை விரும்பிகள், இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் சில பேர் இசை கருவிகள் வாசிப்பாங்க, பாட்டு பாடுவாங்க கடைசியா நம்ம கிட்ட காசு கேப்பாங்க, மக்கள் அவங்கள பிச்சகாரங்கம்பாங்க, ஆனா உண்மையிலேயே நாம அவங்க திறமைய பிச்சை வாங்கணும்,முறையான பயிற்சி இல்லாம, கத்து கொடுக்க சரியான ஆள் இல்லாம அவங்க அந்த கருவிய வாசிக்கிற விதம், கண்டிப்பா நீங்க உங்கள மறந்துடுவீங்க.முக்கியமான இன்னொன்னு திருசூலம்னு ஒரு ஸ்டேஷன் இருக்கு அதான் சென்னை விமான நிலையத்துக்கு போறதுக்கு இறங்க வேண்டிய ஸ்டேஷன். இந்த ஸ்டேஷன்ல இருந்து நம்ம விமான நிலயத்த பாத்தீங்கன்னா...அடடா பிரமாதமா இருக்கும்..இந்த வார்த்தைகள சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் சொல்றேன்...கண் தெரியாது அப்படின்னு நாம சொல்லுவோம்,ஆனா அவங்களால கண்ணா திறந்து பாக்க முடிலன்னாலும்..நம்ம அறிவு கண்ண திறக்க அவங்க பொது அறிவு புஸ்தகம் எல்லாம் விப்பாங்க..(ஆனா நான் அத வாங்கினதில்ல..)

அப்புறம் இந்த பழ வியாபராம்...இந்த பழம் வேணும்னு நீங்க எந்த கடையையும்தேடி போய் பேரம் பேசுற தொல்லையே வேணாம் நீங்க உட்கார்ந்து இருக்கீங்களோ இல்ல நின்னுட்டு இருக்கீங்களோ உங்க இடத்துக்கே தேடி வரும்...கொடுக்குற காசுக்கு கண்டிப்பா அந்த பழங்கள் உங்களுக்கு மன நிறைவை தருமேயன்றி துரோகம் இழைக்காது...இப்படி பேனா,பென்சில்,விளையாட்டு பொருள், புக்கு இப்படி எவ்ளோ மேட்டர் கெடைக்கும் ரயில்ல...மொத்தத்துல கையடக்க கடலைல இருந்து கைக்கு அடங்காத பலாப்பழம் வரை எல்லாத்தையும் வாங்கலாம்,....அந்த ரயில தவிர.. (அதையும் இப்போ ரஜினி தன் பேரனுக்காக வாங்கி இருக்காரு..)

ஒரு ஒரு ஸ்டேஷன்க்கும் இத்தனை கி.மீ இருக்கு இந்த குறிப்பிட்ட வேகத்துலதான் போகணும்னு வரை முறை வெச்சு இந்தியாவுலேயே இயங்குற ஒரே துறை, ரயில்வே தான்..நானெல்லாம் காதல் மயக்கத்துல இருக்கும்போது கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல என் ஆளோட நிப்பேன்...அப்போ மட்டும் எனக்கு கடவுள் நம்பிக்கை வரும் பாருங்க..."கடவுளே எப்படியாவது இன்னொரு 15 நிமிஷத்துக்கு அடுத்த வண்டி வர கூடாதுன்னு" வேண்டிட்டு திரும்புவேன் பய புள்ள வந்து நிப்பான்...இருந்தாலும் இந்த வேண்டுதலுக்கு முன்னாடியும் பின்னாடியும் 2,3 வண்டி விட்டுட்டு தான் ஏறுவோம்னு வெச்சுகோங்க...ஏன் இந்த மேட்டர் நான் சொன்னேன்னா..8.00 மணிக்கு வண்டி வரும்னு அறிவிப்பு வரும்ஆனா மணி 8.01 ஆனா நம்மாளுங்க இவனுங்க வேஸ்ட்யா எப்பவும் நேரத்தோட இவனுங்களுக்கு வர தெரியாதுயா திட்ட ஆரம்பிப்பாங்க, இத்தனைக்கும்கண்ணுக்கு தெரியுற தூரத்துல தான் வண்டி இருக்கும்..ஆனா இந்த ஹைதராபாத்ல 45 நிமிஷத்துக்கு ஒரு வண்டின்னு சொன்னா கூட யாருக்கும் கோபம் வர மாட்டேங்குது, அந்த வண்டியும் சில நேரத்துல கான்செல் ஆகுது...

2009 ஒரு மெண்டல் ரயில இயக்கி அது ஒரு விபத்துக்குள்ளாகி ஒரு 5 பேர்இறந்து போனாங்க,அத தவிர எந்த அசம்பாவிதமும் நான் கேள்வி பட்டதில்ல..

ஜன்னலோரமா உக்காந்துட்டு என் நண்பன் அருள் கூட கதயடிசிட்டு ஆபீஸ்ல வேல செஞ்ச களைப்பு தெரியாம அதுல வர சுகம், போய் பாருங்க தெரியும்...நான் நைட் ஷிப்ட் வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கும்போது நைட் கடைசி வண்டி 12 மணி இல்ல காலைல முதல் வண்டி 4 மணி இப்படி ரயில்ல எல்லா நேரத்துலயும் பயணம் செஞ்சுருக்கேன் (குரோம்பேட்ல எறங்க வேண்டிய நான் காட்டாங்குளத்தூர் வரைக்கும் போயிருக்கேன், தூங்கிகிட்டே...), முதல் வண்டில வரும்போது அந்த பெட்டியிலேயே நான் மட்டும் தனியா இருப்பேன், ஒரு திருடன் வந்தான், என்னமிரட்டினான் ? ! அப்படின்னு ஒரு சம்பவமும் கெடயாது..(திருடரதுக்கு என் சட்டபேன்ட் தவிர அப்போ வேற எதுவும் இல்ல அது வேற விஷயம்)

தோ இப்போ ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு 800 கி.மீ. பயணம் செய்றேன் என்னமோ வீட்டுக்கு வரோம்ன்ற சந்தோஷத்த தவிர அது ஒரு குத்து மதிப்பா தான் இருக்கும், ஆனா இந்த மின்சார ரயில் பயணம் பத்தி அனுபவிக்கணும்னா இதபடிச்சிட்டு ஒரு 8rs டிக்கெட் எடுத்துட்டு பயணம் பண்ணி பாருங்க தெரியும்...

1 comment:

  1. நீங்க எப்பவும் போல பேச்சு தமிழ்ல எழுதியதால் கொஞ்சம் புரிஞ்சுக்க கடினமா இருக்கு.
    நல்ல அனுபவங்கள்.. ஆனா ரயில்ல புடிக்காத ஒரே விஷயம், நின்னுக்கிட்டே வர கூடாத வர முடியாத ஒரு சிலருக்காக யாரும் உட்கார இடம் குடுக்கவே முன்வர மாட்டாங்க.

    ReplyDelete